Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிரானைட் முறைகேடு விசாரணை: சகாயம் குழுவை கலைக்க உத்தரவு

கிரானைட் முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்ட சகாயம் குழுவை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த, ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. 3 மாத விசாரணைக்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் சகாயம் அறிக்கை தாக்கல் செய்தார்.  இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றம், சகாயம் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவை வரும் 31  ஆம் தேதிக்குள் கலைக்க உத்தரவிட்டுள்ளது. வரும் 31 -ம் தேதிக்குள் இதுவரை நடந்த விசாரணை அறிக்கை அனைத்தையும் சமர்பிக்கவும் ஆய்வுக்காக வழங்கப்பட்ட கணினி உள்ளிட்ட உபகரணங்களையும் திருப்பி அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான சகாயம், "எனது அறிக்கையை யாரும் சந்தேகப்பட வேண்டாம். எனது அறிக்கையைச் சந்தேகப்படுவது எனது நேர்மையைச் சந்தேகப்படுவதற்கு சமம்"என்று கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close