தவமாய் தவமிருந்து, பட்டியல், சத்தம் போடாதே எனப் பல படங்களில் தன் நடிப்பால் கவனம் பெற்றவர் பத்மபிரியா. இடையில் மலையாளம், தெலுங்கு, பெங்காலி, கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்துவந்தார்.
இப்போது இந்திப் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார் பத்மப்ரியா. 'ஏர்லிஃப்ட்' படம் இயக்கிய ராஜா கிருஷ்ணமேனன் அடுத்து இயக்கிக் கொண்டிருக்கும் 'செஃப்' படத்தில்தான் நடிக்கிறார் பத்மப்ரியா. இதற்கு முன் 'ஸ்ரைக்கர்' என்ற படம் மூலமே பாலிவுட்டில் அறிமுகமான பத்மப்ரியாவுக்கு இது இரண்டாவது இந்திப் படம். 2014ல் வெளியான 'செஃப்' என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக்காக உருவாகிக் கொண்டிருக்கும் இதில் சைஃப் அலிகானின் மனைவியாக நடித்துக் கொண்டிருக்கிறார் பத்மபிரியா.