வெளியிடப்பட்ட நேரம்: 15:01 (19/07/2017)

கடைசி தொடர்பு:15:01 (19/07/2017)

பட்ஜெட் போதாது... அரசுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய விஞ்ஞானிகள்!

இந்திய விஞ்ஞானிகள்

மூன்று வருட பா.ஜ.க. ஆட்சியில், இந்தியா முழுவதும் ஆங்காங்கே பல போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், இப்போது ஒட்டுமொத்த இந்திய விஞ்ஞானிகளும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, போராட்டக்களத்தில் குதிக்க உள்ளனர். வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி, அனைத்து மாநில தலைநகரங்களிலும் ‘India March for Science’ என்ற பெயரில் அணிவகுப்பு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதில் கலந்துகொள்ளுமாறு விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் விருப்பமுள்ள குடிமக்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வைக்கப்படும் கோரிக்கைகள்

  • நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், 10 சதவிகிதம் கல்விக்கும் ஒதுக்கப்பட வேண்டும்.
  • அரசு அறிவியல் ஆதாரமற்ற, மூடநம்பிக்கைகளைப் பரப்பும் செய்திகளைப் பிரச்சாரம் செய்யக்கூடாது. அரசியலமைப்பின் 51 ஏ பிரிவின்படி விஞ்ஞானம், மனிதநேயம், கேள்விகேட்கும் மனப்பான்மை ஆகியவற்றை வளர்க்க வேண்டும்.
  • பாடத்திட்டங்களில் அறிவியல் ஆதாரமற்ற கருத்துகளைத் திணிக்கக்கூடாது.
  • இயற்றப்படும் கொள்கைகள் அனைத்தும் ஆதாரம் சார்ந்த அறிவியலை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.

புவி ஈர்ப்பு அலைகள் மற்றும் ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) கண்டுபிடிக்கப்பட்டதில் பெரும்பங்கு, மங்கல்யான் விண்கலம் ஏவப்பட்டது, அந்நிய நாட்டின் உதவிகளை எதிர்பார்க்காமல் செயற்கைக்கோள்களை ஏவும் திறன், சமீபத்திய ‘சரஸ்வதி’ கேலக்ஸி கண்டுபிடிப்பு உட்பட பல்வேறு சாதனைகளை இந்திய விஞ்ஞானிகள் நிகழ்த்தி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க