Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கலாம் நினைவிடத்தில் அக்னி ஏவுகணையின் மாதிரி!

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாமின் 2-ம் ஆண்டு நினைவு நாள் ஜூலை 27-ல் கடைபிடிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் ராமேஸ்வரம் அருகே கட்டப்பட்டு வரும் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் தேசிய நினைவிடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.  மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் இந்த நினைவிடத்தில் மறைந்த கலாம் அவர்களைப்  பெருமைப் படுத்தும் வகையில் அவரது நினைவிடத்தை மிகச் சிறப்பாக அமைத்து வருகின்றனர்.  கலாம் அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் அவரது நினைவிடத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக கலாம் பயன்படுத்திய புத்தகங்களை கொண்ட நூலகம் அமைக்கப்பட உள்ளது. தொடர்ந்து அறிவுசார் மையம், கோளரங்கம் என பல வசதிகளை இங்கு ஏற்படுத்தும் திட்டம் உள்ளது. கலாமின் கண்டுபிடிப்பான அக்னி ஏவுகணையின் மாதிரி இங்கே நிறுவப்பட்டுள்ளது.

kalam memorial

கலாம் நினைவிடப் பணிகள் குறைந்த நாள்களில் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. கலாம் நினைவிடத்தை உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் காண வருவார்கள். கலாமின் பெருமைகளை எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட இதைத் திறந்து வைக்க பிரதமர் வர இருக்கிறார்.

இதனையடுத்து,  பிரதமர் கலந்துகொள்வதால்,  பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தென் மண்டல ஐ.ஜி சைலேஷ் குமார் யாதவ் இன்று கலாம் நினைவிடத்துக்கு வந்திருந்தார். அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுவரும் மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள், டி.ஐ.ஜி பிரதீப்குமார், மாவட்ட கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "கலாம் நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்கவரும் வி.வி.ஐ.பி- களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளேன். விழா பற்றிய முழுமையான அறிவிப்பு வந்தவுடன் அதற்குத் தகுந்தவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு அளவில் மேற்கொள்ளப்படும்" என்றார்.

முன்னதாக விழா நடைபெற உள்ள இடங்கள் மற்றும் மண்டபம் முகாமில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளம் ஆகியவற்றையும் ஐ.ஜி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

தற்போது கலாம் நினைவிடத்தில் ஆயுத போலீஸார் மோப்ப நாயுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close