Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வியந்து பாக்குது உலக உருண்டை... வேதனையில் கரையுது கடலை உருண்டை!' - ஜிஎஸ்டி-யைக் கலாய்த்த டி.ஆர்.

சென்னையில் இன்று காலை, லட்சிய தி.மு.க சார்பில் அதன் நிறுவன தலைவர் டி.ராஜேந்தர் தலைமையில் ஜிஎஸ்டி-க்கு எதிராகவும் கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டம் நடந்தது.


 இந்தப் போராட்டத்தில் தொண்டர்களுடன் கலந்துகொண்ட டி.ஆர், தனது பாணியிலேயே பல பஞ்ச் வசனங்களை கோஷங்களாக முழங்கினார். 

எண்ணெய் எடுக்க தமிழ்நாட்டை ஆக்கிவிட்டார்கள், தலைவாசல்!
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு திறந்து விட்டார்கள், கடை வாசல்!
நீண்ட துயரில் வாடிக்கொண்டிருக்கிறது, நெடுவாசல்!
இது போன்று மேலும் தமிழகத்தில் உருவாகலாமா பல வாசல்!

 

எண்ணெயில் மிதக்குது, கதிராமங்கலம் வயலு!
விட்டா, எண்ணெயிலே குளிக்கும் போலயிருக்கு சென்னையில கடலு!
பத்தி எரியுது தமிழர்களின் வயிறு!
இதுல மத்திய மந்திரிகள் திரிக்கிறாங்க, மணல்கயிறு !

ஐந்து ரூபாய் விற்றது, ஆறு ரூபாய் ஆகிவிட்டது, இட்லி!
அடித்தட்டு மக்களைப்பற்றி அறிந்து கொள்ளாமல் இருக்கலாமா?
ஐயா அருண் ஜெட்லி !

கொஞ்சம்கூட தெரியலையே, ஏழைகளின் வலி!
குடிக்கும் தண்ணீருக்கும் போடலாமா இப்படி வரி?

உரசினால்தான் எரியும் தீப்பெட்டி!
உள்ள வரியை நினைச்சாலே, பத்தாமலே எரியுது வத்திகுச்சி!

ஏற்கெனவே செழித்து வளருது, இங்க சீனப்பட்டாசு!
சிரமத்தில் கண்ணீர் வடிக்குது, எங்க சிவகாசி பட்டாசு!
இதிலே பட்டாசு தொழிலை முடக்கலாமா? 
பயங்கர வரி போட்டுத்தாக்கலாமா?

இந்தியாவில் 28%  ஜிஎஸ்டி வரியா? 
இந்த நாட்டுக்கு இப்படி ஒரு முகவரியா?
வியந்து பாக்குது உலக உருண்டை!
வேதனையில் கரையுது கடலை உருண்டை!

ஏற்கெனவே சினிமா கட்டணம் ஜாஸ்தி!
இதில் ஜிஎஸ்டி வரி போட்டு, சினிமாவை ஆக்கிவிட்டார்கள் நாஸ்தி!

தாறுமாறா விலையை ஏத்தலாமா, பட்டணம்?
தாங்கவே முடியலை, சினிமா கட்டணம்!

மொத்தத்தில மோடி ஐயா போடுவாருன்னு பார்த்தோம் போடு!
அவரு இந்தியன் உடம்பு எல்லாம் போட்டுட்டாரு வரியால கோடு!
ஆக, இந்தியனை ஆக்கிட்டாரு, வரி குதிர!
வரிபோட்டு இந்தியாவையே உலுக்கிட்டாரு அதிர!
வரும் காலத்தில தாமரையை வச்சிடாதீங்க உதிர!
வரியைக் குறைத்து விடுங்க என்று கேட்கிறோம், கதற..! கதற..!  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close