வெளியிடப்பட்ட நேரம்: 17:44 (19/07/2017)

கடைசி தொடர்பு:17:44 (19/07/2017)

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் மனித இனத்துக்கு ஆபத்து... எச்சரிக்கும் எலான் மஸ்க்!

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சியால் மனித இனத்துக்கு ஆபத்துதான் என்று தெரிவித்துள்ளார். எலெக்ட்ரிக் கார்கள், ஹைப்பர்லூப் போக்குவரத்துத் திட்டம், SpaceX எனப் பல திட்டங்களில் பிஸியாக இருக்கும் மனிதர் சமீபத்தில் ரோட் தீவில் நடைபெற்ற அமெரிக்காவின் ‘the Bipartisan National Governors Association’ இல் கவர்னர்களைச் சந்தித்து உரையாடி இருக்கிறார்.

 எலான் மஸ்க்

தன் எலெக்ட்ரிக் கார் நிறுவனம், திட்டமிட்டிருக்கும் விண்வெளி பயணங்கள் குறித்து விவரித்த எலான் “ரோபோக்கள் மனிதர்களின் வேலைகளைப் பிடுங்கிக்கொள்ளுமா?” என்ற ஜாலி கேள்விக்கு சற்று சீரியஸாகவே பதிலளித்துள்ளார்.

“ரோபோக்கள் அனைத்து வேலைகளையும் நம்மைவிட சிறந்த முறையில் நிச்சயம் செய்யும். அதன் வளர்ச்சி மனித இனத்துக்கு மிகவும் அச்சுறுத்தலான ஒன்று. அதை நாம் ஏன் வரவேற்கிறோம் என்றே எனக்குப் புரியவில்லை. அரசு இது குறித்த ஆராய்ச்சிகளில் மூக்கை நுழைத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். விதிகளைப் பலப்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் நமக்கு ஆபத்துதான்!” என்று எச்சரித்தார்.

இதுகுறித்து, கடந்த 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் எலான் பலமுறை பேசியுள்ளார். 2015-ல் பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் உடன் சேர்ந்து “கில்லர் ரோபோக்கள்" உருவாகும் அபாயம் உள்ளதாக எச்சரித்திருந்தார். எதுவாக இருந்தாலும் பளிச்சென்று பேசும் இவர், “AI-யின் ஆபத்துகள் மனிதர்களுக்கு விளங்கும்போது, இன்று ரோபோக்களை ரசிக்கும் நான், அதைப் பார்த்து பயப்படத் தொடங்கியிருப்போம்” என்று கவலையுடன் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க