Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' தங்கம் தென்னரசு முயற்சியால் இது நடந்தது!'  - நெகிழும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் 

தமிழக வனத்துறையில் பணியாற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கான சம்பளத்தை 50 சதவீதம் உயர்த்தியுள்ளது தமிழக அரசு. 'வேட்டைத் தடுப்பு காவலர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, நிதித்துறை செயலரிடம் கோரிக்கை வைத்தார் தி.மு.க எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு. அதன் விளைவாகவே சம்பளம் உயர்த்தப்பட்டிருக்கிறது' என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள். 

thangam thennarasu

 

காட்டுக்குள் இருந்து ஊருக்குள் வரும் யானையை விரட்டுவது, கரடி, சிங்கம் போன்ற காட்டு விலங்குகளை கூண்டுக்குள் பிடித்து வனத்துக்குள் விடுவது வரையில் வேட்டைத் தடுப்பு காவலர்களின் பணி மிக முக்கியமானது. பெரும்பாலும் பழங்குடியின மக்களே இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாதம்தோறும் 6,750 ரூபாய் சம்பளத்துக்கு இவர்கள் வேலை பார்க்கின்றனர். இந்த சம்பளமும் அவர்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், வேட்டைத் தடுப்பு காவலர்களின் சம்பளத்தை பத்தாயிரமாக உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

forest officers

Representational Image

வேட்டைத் தடுப்பு காவலர் ஒருவரிடம் பேசினோம். " காட்டு விலங்குகளை விரட்டும்போது, எதிர்பாராதவிதமாக எங்களில் ஒருவர் உயிரிழந்தால் எந்தவித காப்பீடும் கிடையாது. மருத்துவ செலவுக்கு அரசிடம் இருந்து எந்த உதவியும் எதிர்பார்க்க முடியாது. மனிதநேயம்மிக்க வனத்துறை அதிகாரிகள் இருந்தால், எங்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். எங்கள் சம்பளத்தை உயர்த்தியது நல்ல விஷயம். ஆனால், இப்போது வழங்கப்படும் சம்பளமே மூன்று மாதங்களுக்கு ஒருமுறைதான் வருகிறது. மாதத்தோறும் சரியான முறையில் வழங்குவதற்கு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். வனவிலங்குகளை விரட்டச் செல்லும்போது, அடிப்படையான டீ, உணவு போன்ற விஷயங்களுக்காகக்கூட அதிகாரிகளையோ தனியார் அமைப்புகளையோதான் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியுள்ளது. எங்களுடைய நீண்டநாள் கோரிக்கை குறித்து திருச்சுழியம் எம்.எல்.ஏ தங்கம் தென்னரசுவின் கவனத்துக்கு எடுத்துச் சென்றோம். நேற்று அவர் நிதித்துறை செயலரை சந்தித்து இதுகுறித்து கோரிக்கை வைத்தார். அந்த இடத்திலேயே வனத்துறை செயலரை வரவழைத்து, மாதம் பத்தாயிரம் ஊதியம் வழங்கும் கோப்பைத் தயார் செய்து, வனத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சரின் ஒப்புதலையும் பெற்றார். இன்று காலையிலேயே 110 விதியின் கீழ் அறிவிக்கச் செய்து விட்டார். எங்கள் வேதனையை சரியான நேரத்தில் எடுத்துரைத்த தங்கம் தென்னரசுக்கு நன்றி" என்றார் நெகிழ்ச்சியோடு. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement