வெளியிடப்பட்ட நேரம்: 21:21 (19/07/2017)

கடைசி தொடர்பு:21:24 (19/07/2017)

ராஜஸ்தான் பாரத்பூர் மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி

தற்காப்புக்கலை

ராஜஸ்தான் பாரத்பூர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இலவசமாகத் தற்காப்புக்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் இம்மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் வெகுவாகக் குறைந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ராஜஸ்தான் கராத்தே பள்ளி இயக்குநர் ஒன்கர் பன்சோலி விடுத்துள்ள அறிக்கையில், ‘பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் பெண்கள் வழியில் ஆண்களால் ஈவ்டீசிங், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு முதல்கட்டமாக பாரத்பூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவசமாகத் தற்காப்புக்கலை பயிற்சியை அளித்தோம். இதுவரை 6,500 மாணவிகள் பயிற்சி பெற்றுள்ளனர். பயிற்சி மூலம் மாணவிகள் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் ஆற்றலுடன், தன்னம்பிக்கையுடன் திகழ்வதைக் காண முடிகிறது. தற்காப்புக் கலை பயிற்சி மூலம் பாலியல் வன்கொடுமை வழக்குகள் குறைந்துள்ளதோடு, பெண்கள் உடலளவிலும் மன அளவிலும் வலிமையுள்ளவர்களாக விளங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க