“எலும்பு மருத்துவர் எச்.ராஜா... தம்பி அமைச்சர் ஜெயக்குமார்...!” - அமைச்சர்களை விளாசும் கமல் | kamal hits back at Ruling parties

வெளியிடப்பட்ட நேரம்: 20:35 (19/07/2017)

கடைசி தொடர்பு:11:21 (20/07/2017)

“எலும்பு மருத்துவர் எச்.ராஜா... தம்பி அமைச்சர் ஜெயக்குமார்...!” - அமைச்சர்களை விளாசும் கமல்

 

கமலின் ட்விட்டர் ஐடி சில மாதங்களாகவே அரசியல் பேசிக்கொண்டுதான் இருக்கிறது. சில நாள்களுக்கு முன் நடந்த பிரஸ்மீட்டில், தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் படிந்துள்ளது என கூறினார் கமல். அன்றிலிருந்து தமிழக முதல்வர், தமிழக அமைச்சர்கள் அனைவரும் கமலுக்கு எதிர்வினை ஆற்றி வருகிறார்கள். திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் கமலுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 

நேற்றிரவு கமல் பதிவு செய்த ட்வீட் லேசாக அரசியல் பேசினாலும், அது பலருக்கும் புரியவில்லை. இன்று காலை , பா.ஜ.க-வின் எச்.ராஜா கமலை கடுமையாக விமர்சித்து இருந்தார். எல்லாவற்றிற்கும் சேர்த்து, கமல் இன்று தன் ட்விட்டர் தளத்தில் பதில் ஒன்றை ட்விட் செய்து இருக்கிறார், 

அதில் ஊழல் புகார்களை தமிழக அரசின் அதிகாரபூர்வ தளத்துக்கு http://www.tn.gov.in/ministerslist அனுப்புமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்