Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் செல்ல தனி வசதி உள்ளதா?'- மதுரை நீதிமன்றம் கேள்வி!

மதுரை உயர் நீதிமன்றம்

மதுரை, மேலூரைச் சேர்ந்த பழனிகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், பெட்டவாய்த்தளை முதல் குளித்தளை வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் 700-க்கும் அதிகமான மணல் லாரிகள் நிறுத்துவதால் பாதிப்பு ஏற்படுகிறது. நெடுச்சாலைகள் பயன்படுத்துவோர் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தியும் பயனற்று போகிறது. எனவே, சாலையில் லாரிகள் அதிக அளவில் நிறுத்த அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.   

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற அமர்வு, வழக்கில் தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர்களையும், அனைத்து சுங்கக் கட்டண வசூல் மைய அதிகாரிகளையும் எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டது.

மேலும் நீதிமன்றம், சுங்கக்கட்டண வசூல் மையத்தில் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளதா?, மீட்பு வாகன வசதி, கண்காணிப்பு, டோல் மையங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல தனி வசதி, கழிப்பறை உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் உள்ளனவா? என பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதையடுத்து, அனைத்து சுங்கச்சாவடிகளின் திட்ட இயக்குநர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இந்த வழக்கை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement