நீட் தேர்வு விவகாரம்: டெல்லி சென்றது தமிழக அமைச்சர்கள் குழு

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக ஜெயக்குமார், தங்கமணி, சி.வி.சண்முகம், அன்பழகன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் குழு டெல்லி சென்றுள்ளது. இந்தக் குழு, மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரை இன்று மதியம் சந்திக்க உள்ளது.

Neet

 

அப்போது, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரிக்கை வைக்க உள்ளனர். மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இதில், தமிழகத்திலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்வுபெற்றனர்.

முன்னதாக, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று நாட்ளுமன்ற மாநிலங்களவையில், அ.தி.மு.க மற்றும் தி.மு.க. எம்பி-க்கள் ஓரணியில் திரண்டு, மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அ.தி.மு.க. எம்பி., செல்வராஜ், “தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி பல நாள்கள் ஆகியும் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் வழங்கப்படாமல் இருப்பது சரியல்ல” என்றார்.

இந்நிலையில், டெல்லிக்குச் சென்றுள்ள, தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து, நீட் தேர்வு விவகாரம் தொடர்பாகப் பேச உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!