நீட் தேர்வு விவகாரம்: 27-ம் தேதி தி.மு.க மனித சங்கிலி போராட்டம்

தி.மு.க மாவட்ட செயலாளர்களின் கூட்டம், செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. 

 

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கதிராமங்கலம், நீட் தேர்வு விவகாரங்கள், நெடுவாசல் விவசாயிகள் போராட்டம்  எனப் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படுகின்றது. நீட் தேர்வு விவகாரத்தில் மாநிலம் தழுவியப் போராட்டங்கள் நடத்துவது பற்றியும், மக்கள் பிரச்னைகளைத் தி.மு.க எதிர்கொள்வது பற்றியும் இந்தக் கூட்டதில் விவாதிக்கப்படுகிறது. 

இந்த நிகழ்ச்சியில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்துகொண்டுள்ளனர். தி.மு.க மூத்த தலைவர்கள் பேராசிரியர் க.அன்பழகன், துரைமுருகன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

இந்தக் கூட்டத்தில் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய  அரசைக் கண்டித்து வரும் 27 -ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாலை 4 மணிக்கு மனித சங்கிலிப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!