பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடம்: அமெரிக்கா அறிவிப்பு! | US says pakistan becomes safe place for terrorist!

வெளியிடப்பட்ட நேரம்: 12:58 (20/07/2017)

கடைசி தொடர்பு:12:58 (20/07/2017)

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடம்: அமெரிக்கா அறிவிப்பு!

தீவிரவாதிகள் பாதுகாப்பாகத் தஞ்சமடையும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருப்பதாக, அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளது. லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் சகஜமாகச் செயல்படும் வகையிலான சூழல் நிலவுவதாகவும் கூறியுள்ளது.

தீவிரவாதம்

ஒவ்வொரு வருடமும் 'தீவிரவாத நாடுகளின் அறிக்கை' ஒன்றை அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுவருகிறது. சமீபத்தில், ட்ரம்ப் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, தீவிரவாதத்தின் மீதான கெடுபிடியை அமெரிக்கா தீவிரமாக்கிவருகிறது. இந்த நிலையில், தற்போது அமெரிக்கா வெளியிட்டுள்ள தீவிரவாத நாடுகளின் அறிக்கையில், தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் முன்னிலை வகிப்பதாகத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானிலிருந்துதான் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்படுவதாகவும், அவற்றுக்குத் தேவையான நிதி, ஆயுதங்கள் அனைத்தும் சகஜமாகக் கிடைப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் தனது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள தீவிரவாதத்தைப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க