வெளியிடப்பட்ட நேரம்: 12:59 (20/07/2017)

கடைசி தொடர்பு:13:09 (20/07/2017)

''இப்படியா ஒப்பிடுவார்கள்..!''- அஸ்வினை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

டந்த 1958-ம் ஆண்டு, ஜெர்மனியின் மியூனிச் நகரில் கால்பந்து உலகம் அதிர்ந்த சம்பவம் நிகழ்ந்தது. சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்கேற்பதற்காக மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்கள் சென்ற விமானம், மியூனிச் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது.  அதில்,  எட்டு மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள் உள்ளிட்ட 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  துயரமான அந்தச் சம்பவத்திலிருந்து மீண்டு வர, மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு இரண்டு ஆண்டு காலம் பிடித்தது.  ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை அணிக்குத் தடை நீக்கப்பட்டதையடுத்து, அந்த அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்தனர். 

சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்

தோனி, 'தல' என மஞ்சள் வண்ண ஜெர்சியை அணிந்து, தனது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டார். தோனியின் புகைப்படம் வைரலானது. சென்னை அணியின் மற்றொரு வீரரான அஸ்வின், ''1958-ம் விபத்துக்குப் பிறகு, மான்செஸ்டர் யுனைடெட் அணி வீறுகொண்டு எழுந்தது. அது போலவே, சி.எஸ்.கேயும் எழுச்சிபெறும்'' என்கிற விதத்தில் ட்வீட் செய்திருந்தார்.  

அஸ்வினின் ஒப்பீட்டை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள், அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர். மியூனிச்சில் நிகழ்ந்தது பல உயிர்களைப் பலி கொண்ட விபத்து. சென்னை அணியோ, சூதாட்டத்திலும் மோசடியிலும் ஈடுபட்டுத்  தடைக்குள்ளானது. விபத்தையும் குற்றத்தையும் இணைந்து ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது''  எனக் கண்டித்துள்ளனர். 

மியூனிச் சம்பவத்தை, ஒரு உதாரணத்துக்காகவே பயன்படுத்தியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க