வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (20/07/2017)

கடைசி தொடர்பு:13:29 (20/07/2017)

'அணு ஆயுதச் சோதனையை நிகழ்த்தாமல் இருக்க பணம்' -அமெரிக்காவின் திட்டத்தை உடைத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃப்!

பாகிஸ்தான் தனது அணு ஆயுதச் சோதனைகளை நிகழ்த்தாமல் இருப்பதற்காகப் பணம் தருகிறேன் என்று கிளின்டன் சொன்னதாகப் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் கூறியிருக்கிறார். 

பாகிஸ்தான்

பாகிஸ்தான் பிரதமர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் குவிந்திருக்கும் நிலையில், பனாமா ஊழலிலும் சிக்கி நீதிமன்றப் படிகளை ஏறிக்கொண்டிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக தனது பிம்பம் உடைவதைத் தாங்க முடியாமல் பதவி விலகும் நிலையில் இருக்கும் அவர் பல உண்மைகளை வெளியிட்டு வருகிறார்.

தற்போது அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன் குறித்து ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். அதாவது, பாகிஸ்தான் அணு ஆயுதச் சோதனையை நடத்தாமல் இருக்க கிளின்டன் 5 பில்லியன் டாலர் தர முன்வந்ததாகக் கூறியிருக்கிறார். 

'பாகிஸ்தான் மீது அக்கறையில்லாமல் இருந்திருந்தால் நான் அந்தப் பணத்தை வாங்கியிருப்பேன். மறுத்திருக்க மாட்டேன்' என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் கூறியிருக்கிறார். 1998ல் பொக்ரானில் இந்தியா அணு ஆயுதச் சோதனையை நடத்திய சில நாள்களுக்குப் பின்னர் பாகிஸ்தானும் தனது அணு ஆயுதச் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க