குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரும் ஓ.பன்னீர்செல்வம் அணி எம்பி-க்கள்!

குட்கா விவகாரம்குறித்து சிபிஐ விசாரணை கோரி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்பி-க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்ய, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக காவல்துறைத் தலைவர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து தொடர்ச்சியாக புகார் எழுப்பிவந்தனர்.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்பி-க்கள், நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குட்கா, பான் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.  தமிழக அமைச்சர்கள், நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த நிலையில், அமைச்சருக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த எம்பி-க்கள் சிபிஐ விசாரணை கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!