Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வருமான வரித்துறை கடிதமா? அப்படின்னா?' - குட்கா புகாருக்கு தலைமைச் செயலாளரின் பதில்

குட்கா விவகாரம் தொடர்பாக 2016-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள், தமிழக அரசுக்கு எந்த புகார் கடிதமும் அனுப்பவில்லை என்று தலைமைச் செயலாளர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்ய, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக காவல்துறைத் தலைவர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் லஞ்சம் வாங்கியதாகக் வருமான வரித்துறை குற்றம்சாட்டியது. அதிரவைத்த இந்த புகார் தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. இந்த நிலையில் டிஜிபி ராஜேந்திரனுக்கு தமிழக அரசு நீட்டிப்பு வழங்கியது.

இதனிடையே, குட்கா விவகாரத்தில் சிக்கிய 'டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி கதிரேசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் கொண்ட அமர்வு, இரு தரப்பு வாதங்களையும் கேட்டபின், மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று பிரமாணப் பத்திரம் ஒன்று தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. அதில், "குட்கா விவகாரம் தொடர்பாக 2016-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள், தமிழக அரசுக்கு புகார் கடிதம் அனுப்பியதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆவணங்களை ஆய்வுசெய்தபோது, இது போன்ற புகார் கடிதம் ஏதும் தமிழக அரசுக்கோ, அதன் துறைகளுக்கோ வரவில்லை என்பது தெரியவந்துள்ளது" என கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close