Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் இருந்து வெளியேறுகிறது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி!

டந்த 21 ஆண்டுகளாக சென்னையில் நடைபெற்று வந்த சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் புனே நகருக்கு மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை ஓபன் டென்னிஸ் புனேவுக்கு மாற்றம்

இந்தியாவின் ஒரே ஐ.டி எப் போட்டியான சென்னை ஓபன் தொடரைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டாதது; போதுமான ஸ்பான்சர்கள் கிடைக்காமல் போனதே  இடமாற்றத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு, ஒவ்வோர் ஆண்டும் சென்னை ஓபன் போட்டிக்கு ரூ. 2 கோடி ஸ்பான்சர் செய்து வந்தது. எனினும், போட்டித் தொடர் வேறு நகரத்துக்கு மாற்றப்படுவது டென்னிஸ் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

சிங்கப்பூர் உள்ளிட்ட இந்தியாவுடன் நெருக்கம் கொண்ட நாடுகளுக்கு போட்டியை மாற்ற முதலில் முடிவு செய்யப்பட்டது. மகாராஷ்டிர மாநில டென்னிஸ் சங்கம்,  புனே நகரில் சென்னை ஓபன் போட்டியை நடத்த ஆர்வம் காட்டுவதால், அடுத்த சில தொடர்களை இங்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

1996-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தொடர் 21 ஆண்டுகளாக சென்னை மண்ணில் நடைபெற்று வந்தது. தமிழகத்தில் இருந்து ஏராளமான டென்னிஸ் வீரர்கள் உருவாக அடித்தளம் அமைத்த தொடரும் கூட. இந்தத் தகவலை தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் உறுதிப்படுத்தவில்லை. என்றாலும் ஓரிரு நாளில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

கார்லஸ் மோயா, வாவ்ரிங்கா,  ரஃபேல் நடால், மெரின் சிலிச் உள்ளிட்ட சர்வதேச நட்சத்திரங்கள் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றுள்ளனர். ஸ்பெயின் வீரர் ரபார்ட் படிஸ்டா நடப்புச் சாம்பியன்!
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close