சேதமடைந்த ரோட்டை சீரமைத்த கோரக்பூர் திருநங்கைக் குழுவினர்!

த்தரப்பிரதேசம் கோரக்பூர் ஜங்கல் மதாதீன் பகுதியில் உள்ள சேதமடைந்த ரோட்டை திருநங்கைக் குழுவினர் சீரமைத்து, புதிய கான்கிரீட் ரோடு அமைத்துள்ளனர்.

திருநங்கை

கோரக்பூர் ஜங்கல்மாதாதீன் பகுதியில் உள்ள ரோடு பலத்த சேதமடைந்து மக்கள் பயன்படுத்த இயலாத நிலையில் இருந்துள்ளது. இதுகுறித்து முனிசிபல் நிர்வாகத்துக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள திருநங்கைகள் 20 பேர் சேர்ந்து தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை கடந்த ஒரு வருடமாக சேமித்து வைத்துள்ளனர். சேமிப்பாக ரூ.1 லட்சம் உயர்ந்ததும், முனிசிபல் நிர்வாகத்தைப் பற்றி கவலைப்படாமல் தாங்களே ஒரு இன்ஜினீயர் மற்றும் இதரப்பணியாளர்களை வரவழைத்து பணிகளைத் தொடங்கியுள்ளனர். அதோடு, இப்பகுதி மக்களும் இக்குழுவினருக்கு ஆதரவு தெரிவித்து நிதி திரட்டித் தந்துள்ளனர். குழுத் தலைவி ராமேஸ்வரி முயற்சியில் இன்று இப்பகுதியில் மக்கள் பயன்படுத்தும் வகையில் புதிய கான்கிரீட் ரோடு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’ என்ற வரிகளுக்கு எடுத்துக்காட்டாக திருநங்கைக் குழுவினர் திகழ்கின்றனர் என அப்பகுதி மக்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!