Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆசிய அளவில் நடைபெறும் ஹார்வேடு நிகழ்ச்சிக்குத் தேர்வான இந்திய மாணவர்!

ஹைதராபாத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஆனந்த்மசகளா ஆசிய அளவில் நடைபெறும் ஹார்வேடு நிகழ்ச்சிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 ஹார்வேடு

ஹார்வேடு பல்கலைக்கழகம் சார்பாக ஆசிய நாடுகளில் முதல் தலைமுறை பட்டம் பெற்றுள்ள இளைஞர்களுக்கு ஒரு பிரத்யேக நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதற்கு ஆசிய அளவில் 2 ஆயிரத்து 500 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் ஹைதராபாத் உஸ்மானிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆனந்த்மசகளாவும் விண்ணப்பித்திருந்தார். ஆனந்தின் தந்தை விவசாயக்கூலியாக வேலை செய்து வருகிறார். தெலுங்கு வழிக்கல்வியில் பள்ளிப் படிப்பை முடித்தாலும், தளராமல் பட்டப்படிப்பு படித்துவந்தார். வறுமை வளர்ச்சிக்குத் தடை அல்ல என்பது மெய்ப்பிக்கும் வகையில் ஆனந்த் பள்ளிப்படிப்போடு, பிற திறன்களையும் வளர்த்துக்கொண்டார். அவரது திறமையை அங்கீகரிக்கும் வகையில் ஹார்வேடு பல்கலைக்கழக நிகழ்ச்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனந்த் உட்பட 40 பேர் ஆசியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆனந்த்துக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த பத்து நாள் நிகழ்ச்சி துபாயில் ஆகஸ்ட்11-ல் இருந்து நடைபெற இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close