வெளியிடப்பட்ட நேரம்: 20:34 (20/07/2017)

கடைசி தொடர்பு:21:13 (20/07/2017)

ட்ரெண்டி லுக்கிற்கு இதையெல்லாம் பின்பற்றுங்கள் பெண்களே

பெண்

 

யிரம் பேருக்கு மத்தியில் செல்வதாக இருந்தாலும் தான் தனித்துத் தெரிய வேண்டும் என்பதே பெண்ணின் விருப்பம். பதின் பருவத்தினர் மட்டுமின்றி வேலைக்குச் செல்லும் பெண்களும் வயது வித்தியாசம் இன்றி ட்ரெண்டியாகத் தெரிய வேண்டும் என்று நினைக்கின்றனர். டிசைனிங் பற்றி எதுவும் தெரியாமல் தனக்குத் தானே டிசைனராகி தேவையற்ற செலவுகளால் பெருமளவு பணத்தை இழந்து விடுகின்றனர். இதற்கெல்லாம் இனி கவலைப்படத் தேவையில்லை பெண்களே

பெண்

ஸ்டைலிஷாகத் தெரிய வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் முதலில் தங்களது உடல்வாகுக்கு ஏற்ற ஸ்டைல் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஹேர்ஸ்டைல், மேக்கப், சிம்பிள் அக்சசரீஸ் மற்றும் உடைகள் என தன் உடலோடு பொருந்தி அழகை கூட்டிக் காட்ட வேண்டும் என்பதே முக்கியம். ட்ரெண்டில் இருக்கிறது என்பதற்காக எல்லாப் பொருள்களும் அனைத்துப் பெண்களுக்கு ஒரே மாதிரியாகப் பொருந்தாது. 

ட்ரெண்டியாகவும் தெரிய வேண்டும் அதே சமயம் அழகிலும் மாற்றுக் குறையக் கூடாது என்று நினைக்கும் பெண்கள் கீழே கூறப்பட்டிருக்கும் 8 விதிகளை மறக்கமால் பின்பற்ற வேண்டும். 

1) உங்களை ஸ்டைலாகக் காட்டுவதில் முதல் இடம் வகிப்பது உங்களது ஹேர் ஸ்டைல். உங்கள் மனதுக்கு நெருக்கமான அழகுக் கலைஞரை சந்தித்து உரையாடுங்கள். ட்ரெண்டி ஹேர் ஸ்டைலுக்கு மாறுங்கள். 

2) நீங்கள் உடுத்தும் உடை உங்களைப் பற்றிச் சொல்வதில் முதலிடத்தில் உள்ளது. நீங்கள் எதை உடுத்தும்போதும் நம்பிக்கையோடு உடுத்துங்கள். உங்கள் உடை கம்பீரமாகவும், தன்னம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கும் பட்சத்தில் அதுவே உங்கள் மீதான மதிப்பீட்டை உயர்த்தும். உங்கள் உடை உங்களின் உயர்ந்த எண்ணங்களை வெளிப்படுத்துவதாக இருக்கட்டும். 

3) இடத்துக்கு தகுந்த உடையை தேர்வு செய்வது ஒரு கலை. அலுவலகம் செல்வதற்கு, பார்ட்டிக்கு செல்ல, திருமண விழாக்களில் கலந்துகொள்ள என்று சூழலுக்குப் பொருந்தும் உடைகளை அணிந்து செல்லுங்கள். எனது வாழ்க்கைப் பயணத்தில் எது வந்தாலும் அதனை என்னால் இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதை உணர்ந்துகொள்ள முடியும். சூழலுக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வதும் எளிதாகும். 

4) நீங்கள் எவ்வளவு அதிகம் பணம் கொடுத்து வாங்கியிருந்தாலும் உங்களது உடல்வாகுக்கு பொருந்தாத உடைகள் உங்களை ட்ரெண்டியாகக் காட்டாது. நீங்கள் செலவளித்த பணம் வீணாகி விடும். எந்த உடையாக இருந்தாலும் சிக்கென பொருந்தும்படி அணிந்து செல்லுங்கள். பாராட்டுகளை அள்ளுங்கள். அழகிய ஆடையோடு உங்களது தன்னம்பிக்கையும், செல்லத் திமிருமே அழகிய அணிகலன்கள். அவற்றை மறந்திட வேண்டாம். 

5) ஜீன்ஸ் எப்போதுமே ட்ரெண்டில் இருப்பதால் இரண்டு ஜோடியாவது உங்கள் வாட்ரோப்பில் இருக்கட்டும். திடீரென வெளியில் கிளம்பும் போதும், ட்ராவல் போன்ற சூழலிலும் சாதாரண டீ சர்ட்டையும் கொஞ்சம் பந்தாவாகக் காட்ட ஜீன்ஸ் அவசியம். 

6) நீங்கள் அணியும் உடை 50 சதவிகிதம் மற்றவர்களுக்குப் பிடித்திருந்தால்போதும். மீதம் 50 சதவிகிதம் அது உங்களுக்கு ஆத்மார்த்தமாகப் பிடித்திருக்க வேண்டும். நீங்கள் செல்லும் இடத்தில் இருக்கும் நபர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்க வேண்டும் என்பதையும் உடைகளால் தீர்மானியுங்கள். எனவே, உடையில் எப்போதும் சிறப்புக் கவனம் செலுத்துங்கள். உங்கள் மனதுக்குப் பிடிக்காத உடை எப்போதும் வேண்டாம். 

7)  ட்ரெண்டியாகத் தெரியவேண்டும் என்பதற்காக உங்களது தோற்றத்தை தலைகீழாக மாற்ற வேண்டியதில்லை. சின்னச் சின்ன விஷயங்களில் மாற்றம் செய்தாலே ட்ரெண்டியாகத் தோன்றலாம். பெல்ட் அணிவது, துப்பட்டாவை வித்தியாசமாகப் போடுவதும் ஸ்டைலை மாற்றும். அணிகலன்களிலும் வித்தியாசம் காட்டுங்கள்.

8) நீங்கள் இப்படி மட்டும்தான் இருப்பீர்கள் என்ற ஒற்றை அடையாளத்தை உருவாக்கி விடாதீர்கள். ஜீன்ஸ் டீஷர்ட் என்று ட்ரெண்டியாக டிரஸ் செய்தாலும் தங்கச் செயின் வளையல், கொலுசு போன்றவற்றை மாற்றிக் கொள்ளவே மாட்டேன் என்ற கொள்கை முடிவுகளை விட்டு விடுங்கள். என்ன உடுத்துகிறீர்களோ அதற்கு ஏற்ப அணிகலன்களையும் மாற்றி உங்களை பர்பெக்டாக உணருங்கள். எப்பவும் நான் புதிதாகவும் இளமையாகவும் இருக்கிறேன் என்பதை உலகுக்குச் சொல்ல நினைக்கும் பெண்கள் ட்ரெண்டில் தான் இருப்பார்கள் இல்லையா?!

இவற்றைப் பின்பற்றினால் நீங்கள் எப்போதும் ட்ரெண்டியாகத் தான் தெரிவீர்கள்?! இளமை ததும்பும் புன்னகையோடு வலம் வாருங்கள். அனைத்திலும் வெற்றியை எட்டுங்கள் பெண்களே! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்