சைக்கிள்களுக்கு வரி விதித்த அமெரிக்க மாகாணம்..!

அமெரிக்காவின் ஓரகன் மாநிலத்தில் சைக்கிள்களுக்கு இனி வரிகட்ட வேண்டும் என்ற சட்டத்தை இயற்றியிருக்கிறார்கள். அமெரிக்காவிலேயே அதிக சைக்கிள் உபயோகிப்பாளர்கள் இருப்பது ஓரகன் மாநிலத்தில்தான். ஆனால், சில காலமாக மாநிலத்தின் வரி வருவாய் குறைந்ததால், தற்போது சைக்கிள்களுக்கென தனி கலால் வரியை அது அறிமுகப்படுத்தியுள்ளது. 

சைக்கிள்

13 ஆயிரம் ரூபாய்க்கும் மேலாக, 26 இன்ச் சுற்றளவிலான வீல் கொண்ட எந்த சைக்கிளுக்கும் ஆயிரம் ரூபாய் கலால் வரியைச் செலுத்த வேண்டும் என அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது உலகம் முழுக்கவே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதோடு அல்லாமல், ஓரகன் மாநில மக்களைக் கடுமையான கோபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அமெரிக்காவிலேயே அதிக எண்ணிக்கையிலான சைக்கிள் உபயோகிப்பாளர்கள் இருக்கும் ஓரகன் மாநிலத்தில் போடப்பட்டிருக்கும் இந்தச் சூழலியலுக்கு எதிரான ஒரு நடவடிக்கை என்று பல சூழலியலாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாததோடு, ஆரோக்கியமான உடல்நலத்துக்கும் சைக்கிள் ஓட்டுவது முக்கியமான விஷயமாக இருக்கிறது. ஆனால், ஓரகன் மாநிலத்தில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த வரி விதிப்பை முன் மாதிரியாகக் கொண்டு மற்ற அமெரிக்க மாகாணங்களும் இதைப் பின்பற்றினால் அது சூழலுக்கு எதிராக அரசாங்கமே, மக்களைத் திசைத் திருப்புவது போன்ற செயலாக இருக்கும் என்பதே எதிர்ப்பாளர்களின் கருத்தாக இருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!