Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரே வெற்றி பெறுவார்': புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ராம்நாத் கோவிந்துக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு பல்வேறு தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதேபோல புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ”புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஜனநாயக முறைப்படி பாராபட்சமின்றி செயல்பட வேண்டும். பா.ஜ.க-வில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலிலும் அவர்களுடைய வேட்பாளரே வெற்றிபெற வாய்ப்புள்ளது” என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close