Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அழகர் கொலையை விசாரணை நடத்திய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்     


 புரட்சிப்புலிகள் அமைப்பின் மதுரை மாவட்ட பொறுப்பாளார் ராசாக்கூர் அழகர், சில நாள்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இக்கொலையை குறிப்பிட்ட பிரிவினர் சிலர் செய்ததாக புரட்சிப்புலிகள் அமைப்பினரும், அழகரின் குடும்பத்தினரும் புகார் எழுப்பி போராட்டம் நடத்தினார்கள். இந்த வழக்கை காவல்துறையினர் விசாரித்து ஒருவரை கைது செய்துள்ளனர் . தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

அழகர் கொலை செய்யப்பட்டதை தேசிய எஸ்.சி, எஸ்.டி. ஆணையத்துக்கு புகார் அனுப்பினார்கள். இதைப் பற்றி விசாரிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் முருகன் இன்று மதுரை வந்தார். ராஜாக்கூரிலுள்ள அழகரின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு, படுகொலை சம்பவம் பற்றி விசாரித்தார். அழகரின் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை செய்வதாகக் கூறினார். அவருடன் புரட்சிப்புலிகள் இயக்க பொதுச்செயலாளர் திலீபன் உட்பட முக்கிய பொறுப்பாளர்கள் வந்திருந்தனர். இக்கொலை விசாரணை பற்றி காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொண்டார். தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்டோர் கொல்லப்படுவது பற்றி கவலை தெரிவித்தார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement