Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆடி வெள்ளி... அம்பிகைக்கும் சிவபெருமானுக்கும் உகந்த வெள்ளி!

டி மாதம் அம்மனை வழிபடுவதற்கு உகந்த மாதம். ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளிலும் விசேஷமான பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும். மேலும் கோயில்களிலும், மண்டபங்களிலும் திருவிளக்கு பூஜையும் பெண்களால் நடத்தப்படும். திருவிளக்கு பூஜையுடன் கூட்டுப் பிரார்த்தனையும் செய்வார்கள். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்பிகைக்கு உகந்த நாள் என்றாலும், இன்றைய வெள்ளிக்கிழமை சிவபெருமானுக்கும் உகந்த நாளாக அமைந்துவிட்டது. 

ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு

ஆம், இன்று சிவபெருமானுக்கு உகந்த திரயோதசி திதியாக அமைந்திருப்பதுதான் இந்த வெள்ளிக் கிழமையின் சிறப்பு. சிவாலயங்களில் மாலை நேரத்தில் நடைபெறும் பிரதோஷ பூஜையை தரிசிக்கும் பேறும், காலையிலோ அல்லது பிரதோஷ காலத்துக்குப் பிறகோ அம்பிகையின் ஆலயத்தில் நடைபெறும் விசேஷ அபிஷேக ஆராதனைகளிலும் கலந்துகொள்ளும் அதிர்ஷ்டமும் நமக்குக் கிடைத்திருக்கிறது. 

புனித நீராடல்

பிரதோஷம் மட்டுமல்லாமல், இன்று சிவபெருமானின் நட்சத்திரமான திருவாதிரையும் சேர்ந்து வந்திருப்பது இன்னும் விசேஷமான பலன்களைத் தரக்கூடியதாக அமைந்துவிட்டது. எனவே பிரதோஷ வேளையில் சிவபெருமானையும், பிறகு அம்பாளையும் தரிசிப்பது மிகவும் உன்னதமான பலன்களை நமக்குப் பெற்றுத் தரும் என்பது உறுதி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close