வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (21/07/2017)

கடைசி தொடர்பு:12:03 (21/07/2017)

கொடுங்கையூர் தீ விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது

சென்னை கொடுங்கையூரில் உள்ள ஒரு சிப்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 4  ஆக உயர்ந்துள்ளது.

கொடுங்கையூர் தீ விபத்து


கடந்த 16-ம் தேதி, சென்னை கொடுங்கையூரில் உள்ள முருகன் சிப்ஸ் கடையில், இரவு 11.30 மணியளவில் சிலிண்டர் ஒன்று திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விபத்தில் தீயணைப்பு வீரர் உட்பட மூன்று பேர் பலியாயினர்.  
காயமடைந்த பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த கடையின் உரிமையாளர் ஆனந்த், சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்ததால்,  தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயந்துள்ளது. காயமடைந்த மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.