ஏடிஎம் மெஷினிலேயே இனி கடன் வாங்கலாம்: ஐசிஐசிஐ வங்கியின் 'அடடே' திட்டம்!

கடன் வாங்க இனி வங்கிக்குப் போகவேண்டிய அவசியமில்லை. ஐசிஐசிஐ வங்கி, தனது தகுதியான வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் மெஷின் மூலமாகவே கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

வங்கி

ஐசிஐசிஐ வங்கி, தனது வாடிக்கையாளர்களில் தகுதியானவர்களை கிரெடிட் அனாலிசிஸ் கம்பெனிகள் மூலமாகத் தேர்வுசெய்து, அவர்களுக்கு ஏடிஎம் மெஷின் மூலமாகவே ரூ.15 லட்சம் வரை ஐந்து வருடத்துக்கான தனிநபர் கடன்களை வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

வாடிக்கையாளர்கள், ஏடிஎம் மெஷின்களிலேயே தனிநபர் கடனுக்கான விண்ணப்பத்தில் கேட்கப்படும் விவரங்களைப் பதிவு செய்து, வெற்றிகரமாக அந்த ட்ரான்சாக்‌ஷனை முடித்தால், உங்களுடைய கடன் தொகை உங்கள் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும். 

வட்டி விகிதம் எவ்வளவு, புராசஸிங் கட்டணம் எவ்வளவு ஆகிய விவரங்கள், ஏடிஎம் மெஷின் திரையில் காண்பிக்கப்படும். ட்ரான்சாக்‌ஷனின்போது, அனைத்து விவரங்களையும் தெளிவாகப் படித்து, கடன் தேவைப்படுவர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!