Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முன்னாள் ஐஜி மகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை..!

சென்னை அடையாறில் உள்ள முன்னாள் ஐ.ஜி அருளின் மகன் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

income tax office

ரூபாய் நோட்டுத் தடை செய்யப்பட்டபிறகு இந்தியா முழுவதும் வருமான வரித்துறையினர் தொடர்ச்சியாக சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் வருமான வரித்துறையினர் தொடர்ச்சியாக சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சேகர் ரெட்டி, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகனராவ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டன.

நேற்று தமிழக  அரசின் சாலைப் பணி ஒப்பந்ததாரர் தியாகராஜனுக்குச் சொந்தமான அலுலகங்களில் சோதனை நடைபெற்றது. அந்தச் சோதனையில் முடிவில் 23 கிலோ தங்கமும், 41 லட்ச ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று முன்னாள் ஐ.ஜி அருளின் மகன் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடிச்சோதனை நடத்திவருகின்றனர். அவர், 60 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை 10 கோடி ரூபாய் எனக் குறைத்து மதிப்பீடு செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வந்த புகாரின் பேரில் அடையாறு போட்கிளப் பகுதியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்றுவருகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement