கன்னியாகுமரி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு! 

ஆடிமாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஆடி முதல் வெள்ளிக்கிழமையான இன்று குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் விஷேச பூஜைகள் நடைபெற்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் அவ்வையாருக்கு தனிக் கோவில்கள் உண்டு. தாழக்குடி அருகே உள்ள அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. குமரி மற்றும் கேரளப் பகுதிகளில் இருந்து வாகனங்களில் வந்து பெண்கள் கோவில் வளாகத்தில் கூழ், கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல் போன்றவை தயாரித்து அம்மனுக்குப் படைத்து வழிபட்டு வருகிறார்கள்.

கோவிலில் பெண்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அவ்வையார் அம்மனை வழிபடுகின்றனர். அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாகர்கோவிலில் இருந்து இறச்சகுளம் வழியாகவும், செண்பகராமன் புதூர் வழியாகவும் சிறப்பு பஸ்கள் அவ்வையார் அம்மன் கோவிலுக்கு இயக்கப்பட்டுள்ளன. குமரிமாவட்டத்தில் உள்ள அம்மன்களுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் அன்னதானம் ஆகியவை  நடந்து வருகின்றன.

பிரசித்தி பெற்ற முப்பந்தல் இசக்கி அம்மன்,கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், கொட்டாரம் முத்தாரம்மன் கோவில், சந்தனமாரியம்மன் கோவில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!