வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (21/07/2017)

கடைசி தொடர்பு:14:40 (21/07/2017)

மீண்டும் பொன்.மாணிக்கவேல்..! - சிலை கடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி!

சிலை கடத்தல் தொடர்பான வழக்கை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தொடர்ச்சியாக விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


அருப்புக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட 6 சிலைகளைக் காவல் துறை அதிகாரிகளே 6 கோடி ரூபாய்க்கு விற்றதாக யானை ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'ரயில்வே துறை ஐஜி-யாக மாற்றப்பட்ட பொன்.மாணிக்கவேல், சிலை கடத்தல் தொடர்பான வழக்கை விசாரிக்க வேண்டும். அவர் திருச்சியிலிருந்து பணியாற்றுவதற்கு ஏற்ப அவருக்குத் தமிழக அரசு அலுவலகங்களை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். அதற்குரிய அரசாணையைத் தமிழக அரசு வெளியிட வேண்டும். சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் கும்பகோணம் நடுவர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். வெவ்வெறு நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் கும்பகோணம் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டர். மேற்குறிப்பிட்ட உத்தரவுகளை நிறைவேற்றியது தொடர்பாக செப்டம்பர் 4-ம் தேதி தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்' என்று உத்தரவிட்டனர். மேலும் செப்டம்பர் 4-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.