போக்குவரத்து ஊழியர்களின் அடுத்த ஸ்டிரைக்! | Tamilnadu Transport employees announced strike 

வெளியிடப்பட்ட நேரம்: 13:27 (21/07/2017)

கடைசி தொடர்பு:13:59 (21/07/2017)

போக்குவரத்து ஊழியர்களின் அடுத்த ஸ்டிரைக்!

தமிழக அரசைக் கண்டித்து, வரும் 26,27,29 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்போவதாக, போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

bus strike
 

''சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர் முன்னேற்றச் சங்க அலுவலகத்தில், தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் இன்று  நடைபெற்றது. கூட்டத்தில், ’போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதில், ஊதியம், மற்றும் ஓய்வூதியப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு, 01.04.2003-க்குப் பின் பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு வருங்கால வைப்புநிதி மற்றும் ஓய்வூதியப் பலன்களை உறுதிப்படுத்துவது, போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு நிதி வழங்குவதை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையென்றால், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகுறித்தும்  கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஜூலை 26,27 ஆகிய தேதிகளில், தமிழகம் முழுவதும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் 29-ம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடைக்கிறது. இது தொடர்பாக, வரும் 25-ம் தேதி குரோம்பேட்டையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உடன் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையென்றால், மீண்டும் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்'' என்று தொழிற்சங்க வட்டாரங்கள் தெரித்தன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க