வெளியிடப்பட்ட நேரம்: 15:08 (21/07/2017)

கடைசி தொடர்பு:15:44 (21/07/2017)

வடகொரியாவுக்குப் போகாதீர்கள்... தடை விதிக்க அமெரிக்கா தயார்! 

வட கொரியாவுக்குச் செல்லும் அமெரிக்கர்களைத் தடை செய்ய அமெரிக்கா தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
அமெரிக்கா தனது குடிமக்களை வட கொரியாவுக்குப் பயணிப்பதைத் தடை செய்ய முன்வந்துள்ளதாக, அமெரிக்காவில் இருந்து வட கொரியாவுக்கு சுற்றுப் பயணத்தை அளித்து வரும் இரண்டு டிராவல் ஏஜென்சி நிறுவனங்கள் இது குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளன. 

அமெரிக்கா,


அமெரிக்க மாணவரான ஓட்டோ வர்ம்பீயரை, அமெரிக்காவைச் சேர்ந்த யங் பயணியர் டூர்ஸ் ஏஜென்சி நிறுவனம், அமெரிக்காவில் இருந்து வடகொரியாவுக்கு அழைத்துச் சென்றது. ஜூன் மாதத்தில் அமெரிக்காவுக்கு கோமா நிலையில் திரும்புவதற்கு முன்னர் 15 ஆண்டுகள் வடகொரியாவில் சிறையில் அடைக்கப்பட்டார். சில நாள்களுக்குப் பிறகு அவர் இறந்தார். 

இந்த நிலையில் கோர்யோ டூர்ஸ் (Koryo Tours) மற்றும் யங் பயணியர் டூர்ஸ் (Young Pioneer Tours) என இந்த இரண்டு அமெரிக்க டிராவல் ஏஜென்சி நிறுவனங்கள் இதுகுறித்து கூறுகையில், `வட கொரியாவுக்கு அமெரிக்கர்கள் பயணிப்பதற்கான தடை வரும் ஜூலை 27-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு 30 நாள்களுக்குப் பின்னர் நடைமுறைக்கு வரும்" என்று தெரிவித்துள்ளது. எனினும் இதுகுறித்து அமெரிக்கா எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை.