மருத்துவமனையில் டிராஃபிக் ராமசாமி ராமசாமி அனுமதி!

கடந்த இரண்டு நாள்களாக திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்தியடிராஃபிக் ராமசாமி ராமசாமிக்கு இன்று திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், திருப்பூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, கடந்த சில நாள்களுக்கு முன்னர் திருப்பூர் வந்திருந்தார் டிராஃபிக் ராமசாமி ராமசாமி. நிகழ்ச்சி முடிந்தும் இரண்டு நாள்களாக திருப்பூரிலேயே தங்கியிருந்த டிராஃபிக் ராமசாமி ராமசாமி திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து அரசு அலுவலகங்களில் போராட்டம் நடத்தினார். திருப்பூர் வட்டாட்சியர் அலுவலக முகப்புப் பகுதியில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றுமாறு வட்டாட்சியரிடம் கோரிக்கை வைத்து அதை அகற்ற வைத்தவர், பின்னர் தமிழ்நாடு அரசு நடத்தும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிகழ்வுக்காக மாநகரம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த ஃபிளக்ஸ் பேனர்களையும் அகற்றவேண்டும் என்று போராட்டம் நடத்தினார்.

இதற்கிடையில், நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயில் நடைபாதையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அ.தி.மு.க. கட்சியினர் வைத்திருந்த மூன்று ஃபிளக்ஸ் பேனர்களை அகற்றுமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து, எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தி அந்த பேனர்களையும்  போலீஸாரை வைத்து அகற்றச் செய்தார். கடந்த இரண்டு நாள்களாக திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்தியவருக்கு இன்று உடல்நிலை சரியில்லாமல்போனது. எனவே, இன்று காலை திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரின் உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள், இன்று முழுவதும் மருத்துவமனையில் தங்கி ஓய்வு எடுக்குமாறு டிராஃபிக் ராமசாமி ராமசாமியை அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!