Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அட்சயப் பாத்திரத்துக்கே வரி விதிக்கிறார்கள்....' : மதுரையில் எல்.ஐ.சி. ஊழியர்கள் போராட்டம்!

அரசு ஊழியர்கள், நடுத்தர வர்க்க மக்கள், வியாபாரிகள், தாங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை வருமான வரியிலிருந்து காப்பற்றிக்கொள்ள எல்.ஐ.சி. போன்ற காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்வார்கள். தற்போது ஜிஎஸ்டி-யில் அதற்கும் கூடுதல் சேவை வரியை விதித்துள்ளதால் எல்.ஐ.சி. சி.பாலிசியில் முதலீடு செய்யும் வாய்ப்பு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதைக்கண்டித்து  ஜிஎஸ்டி-யிலிருந்து பொதுத்துறை காப்பீட்டுத் திட்டங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரைக் கோட்ட எல்.ஐ.சி. ஊழியர்கள் சங்கத்தினர் (insurance corparation employees union)  ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்தைப் பெற்று பிரதமருக்கு அனுப்பும் போராட்டத்தை மதுரை கோட்ட அலுவலகத்தில் இன்று தொடங்கினார்கள். இதில் காப்பீட்டு முகவர்களும் கலந்துகொண்டனர். கோட்டத்தின் சங்கத்தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார்.

இதுபற்றி அவர்கள் பேசும்போது, ''ஆயுள் காப்பீடுகள் மீதான சேவை வரிகள் கடந்த சில ஆண்டுகளில் 12. 50 சதவிகிதமாக இருந்து, இறுதியாக 15 சதவிகிதமானது. இதுவே அதிகமான சேவை வரி. இதனால் சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று நாங்கள் கூறிக்கொண்டிருக்கும்போது, இப்போது ஜிஎஸ்டி-யில் ஒரேடியாக 18 சதவிகிதமாக அதிகரித்துள்ளார்கள். இது ஆயுள் காப்பீடு, உடல்நலக் காப்பீடு, தனி நபருக்கு காப்பீடு வழங்கும் குழுக்காப்பீடுகளுக்கு பொருந்தும் என்று அறிவித்துள்ளார்கள். இது மட்டுமல்லாமல் காப்பீடுதாரர்களுக்கு இன்னும் பல சுமைகளை அறிவித்துள்ளார்கள். இதுவரை இல்லாத அளவில் பாலிசிகளுக்கான தாமதக்கட்டணம், பாலிசியில் வாரிசு நியமனம், நகல் ஆவண கட்டணம் ஆகியவற்றுக்கும் சேவைக்கட்டணத்தை அதிகமாக  விதித்துள்ளார்கள். கோடிக்கணக்கான மக்கள் செலுத்தும் பாலிசி கட்டணத்தின் மூலம்தான்  ஏகப்பட்ட திட்டங்களையும், முதலீடுகளையும் அரசு செய்து வருகிறது. அரசுக்கு அட்சயப் பாத்திரமாக விளங்கும் எல்.ஐ.சி. பாலிசிகளுக்கு அதிகப்படியான சேவைக்கட்டணம் விதிப்பது கொடுமையாகும். எனவே, எல்.ஐ.சி. பாலிசிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி-யை விலக்க வேண்டும். இதை மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து கையெழுத்துப் பெற்று பிரதமருக்கு அனுப்ப உள்ளோம்'' என்றனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close