கரூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி!

         
 

வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி கரூரில், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. அதன்
முன்னோட்டாமாக, கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ்,  கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் உள்ள மலையகவுண்டன்குளத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியைத் தொடங்கி வைத்தார்.


கரூர் மாவட்டத்தில் எதிர்வரும், அக்டோபர் 4-ம் தேதி, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இடைப்பட்ட காலங்களில் அனைத்து அரசுத் துறைகளையும் இணைத்து சமூக நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறையும், துறை சார்ந்த பணிகளை தொடர்ந்து செவ்வனே செய்து
வருகின்றன. அதனையொட்டி, ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, குளித்தலை ஊராட்சி ஒன்றியம், நல்லூர் ஊராட்சியில் உள்ள மலையகவுண்டன்குளத்தில் 400 வேம்பு மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 

மரக்கன்றுகளை நட்டதோடு,"இம்மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் முழுமையாக முடிவுற்ற பின், அனைத்து மரக்கன்றுகளையும் பாதுகாப்பாக பராமரித்து வளர்த்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!