Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில்தான் அதிகம்! - தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையம் தகவல்

நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் மிக அதிகமாக தமிழ்நாட்டிலேயே நடைபெறுகிறது என தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத் துணைத் தலைவர் தெரிவித்தார்.

 

தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் மூலமாக வழங்கப்படும் சலுகைகள், உரிமைகள் ஆகியவை உரியவர்களுக்கு குறித்த சமயத்தில் சென்றடைகிறதா? என்பது பற்றியும் அவர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.  

 

தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கண்காணிப்பு ஆணைய தமிழ்நாடு- புதுச்சேரி மாநிலங்களுக்கான இயக்குநர் மதியழகன், நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார், மூத்த விசாரணை அதிகாரி லிஸ்டர், அனைத்துத் துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையத்தின் துணைத் தலைவரான முருகன், ''தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக ஆய்வுசெய்து வருகிறோம். தற்போது நெல்லை மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு சரியான முறையில் பின்பற்றப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்தோம். அத்துடன், மத்திய, மாநில அரசின் திட்டங்கள், அதற்காகப் பெறப்பட்ட நிதிகள் முறையாக செலவு செய்யப்பட்டிருக்கிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தோம். அவற்றில் எந்த முறைகேடும் நடந்ததாகத் தகவல் இல்லை. 

சில இடங்களில் உள்ள கல்வி நிலையங்களில் கழிப்பிட வசதி உள்ளிட்ட குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை விரைவாகச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க அறிவுத்தி உள்ளோம். நெல்லை மாவட்டத்தில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் 412 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 22 வழக்குகள் தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக 33 கொடூரக் குற்றங்கள் நடந்துள்ளன. அது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 51 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. 

நாட்டிலேயே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிக அளவில் நடப்பது தமிழகத்தின்தான். இங்குதான் தற்போது வரை 5340 வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கொலைகள் அதிகம் நடந்துள்ளன. 32 கொலை வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. வேலைவாய்ப்பு இல்லாததால்தான் இதுபோன்ற குற்றச் செயல்கள் நடக்கின்றன. அதனால் மத்திய அரசிடம் பேசி நெல்லை மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்வோம்” என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement