Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அப்துல் கலாம் நினைவிடத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு!

ராமேஸ்வரம் அருகே கட்டப்பட்டு வரும் கலாம் தேசிய நினைவிடத்தில் நடந்து வரும் பணிகளை, மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பார்வையிட்டார். இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "முன்னாள் ஜனாதிபதி கலாம் அவர்களுக்கு மத்திய அரசின் நிறுவனமான பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பினர் தேசிய அளவிலான நினைவு மண்டபத்தை கட்டியுள்ளனர். கலாம் அவர்களுடன் பணியாற்றியவர்களே அவரது நினைவிடத்தை அமைத்திருப்பது பெருமையானது. இந்த தேசிய நினைவு மண்டபத்தை வரும் 27-ம் தேதி பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

அப்துல் கலாம் நினைவு மண்டபம்

இந்த நினைவு மண்டபம் பணிகள் குறித்து பார்வையிட வந்துள்ளேன். இதன் திறப்பு விழாவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், கட்டடப் பணிகளில் தாமதம் ஏதும் இருந்தால் அதனைக் களைய பாதுகாப்பு அமைச்சரிடம் எடுத்துரைக்கவும், பிரதமர் வர உள்ள மண்டபம் ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை பார்வையிடவும், அங்கு நடக்கும் நிகழ்சியில் பங்கேற்கும் மக்களுக்குத் தேவையான வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தேன். 

அப்துல் கலாம் நினைவு மண்டபம்


இலங்கை அரசால் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு மத்திய அரசால் மீட்கப்பட்ட 5 மீனவர்களைச் சந்தித்தேன். அவர்களின் வாழ்வாதாரத்துக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரினர். அது குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளேன். இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் உள்ளது. மேலும், மீனவர்களுக்கான புதிய திட்டத்தின் கீழ் படகுகள் வாங்கத் தேவையான நிதியுதவியினை வங்கிகள் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

நடிகர் கமல்ஹாசன் பிரச்னை தொடர்பாக என்ன நடக்கிறது என எனக்குத் தெரியவில்லை" என்றார். நிர்மலா சீத்தாராமன் உடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாவட்ட நிர்வாகிகள் முரளிதரன், ஆத்மகார்த்தி ஆகியோர் இருந்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close