Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கரூரில் கல்லூரி பேருந்தை மாணவரே இயக்கியதால் வாகனம் பறிமுதல்!

கல்லூரி பேருந்தை, அங்கு படிக்கும் மாணவரே இயக்கியதால் வாகனத்தைப் பறிமுதல் செய்தார் கரூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்.

கல்லூரி பேருந்து

கரூர் மாவட்டத்தில் கல்லூரி பேருந்தை, அந்த கல்லூரி மாணவரே இயக்கியதால், அந்த வாகனத்தை பறிமுதல் செய்ததாேடு, அந்த மாணவர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. கரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆனந்த், செந்தில் ஆகியோர் அடங்கிய டீம் கரூர் தெரசா பள்ளி அருகே வாகனத்தணிக்கை மேற்கொண்டனர். அப்போது பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள், பள்ளி வாகனங்கள்,பேருந்துகள் ஆகியவைகள் தணிக்கை செய்யப்பட்டது. அப்போது அளவுக்கு அதிகமான மாணவர்களை ஏற்றி வந்த தனியார் கல்லூரி பேருந்து தணிக்கை செய்யப்பட்ட போது, அந்த வாகன ஒட்டுநர் அந்த கல்லூரி மாணவராக இருந்தது கண்டறியப்பட்டது. வாகனத்தை பறிமுதல் செய்து, வட்டார போக்குவரத்து துறையினர் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அந்த மாணவரிடம் லைசன்ஸ் இல்லாதது, அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றி வந்தது என்று இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அந்த கல்லூரி வாகனம், கரூர் வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த வெங்கட்ரமணா பாலிடெக்னிக் கல்லூரிக்குச் சொந்தமானது குறிப்பிடத்தக்கது. இதே போல், ஷேர் ஆட்டோக்களில் மூன்று வாகனங்கள் அளவிற்கு அதிகமான ஆட்களை ஏற்றி வந்ததையடுத்து, அந்த வாகனங்கள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close