வெளியிடப்பட்ட நேரம்: 00:46 (22/07/2017)

கடைசி தொடர்பு:10:56 (11/01/2018)

டி.என்.பி.எஸ்.சி குரூப்- 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு: 4602 பேர் மெயின் தேர்வுக்கு தகுதி!

டி.என்.பி.எஸ்.சி

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கான 85 காலிப் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. டெபுட்டி கலெக்டர் 29, டி.எஸ்.பி 34, வணிக வரித்துறை உதவி கமிஷனர் 8, மாவட்ட பதிவாளர் 1, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 5, மாவட்ட தீயனைப்பு அதிகாரி 8 என்று மொத்தம் 85 அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான முதல்நிலைத் தேர்வு பிப்ரவரி  மாதம் 19-ம் தேதி  நடைபெற்றது. 

அந்த முதல்நிலை தேர்வு முடிவுகள்  நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் 13, 14, 15-ம் தேதிகளில் சென்னையில் முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும். முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்படும். முதன்மை எழுத்துத்  தேர்வுக்கு தேர்வான 4,602 பேரின் பதிவெண் பட்டியல் www.tnpsc.gov.in என்ற தேர்வாணயத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க