நாகப்பட்டினம், கடலூரில் 45 இடங்கள்- கால்பதிக்கும் ஓ.என்.ஜி.சி | 45 more petroleum and chemical projects in tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 11:59 (22/07/2017)

கடைசி தொடர்பு:12:38 (22/07/2017)

நாகப்பட்டினம், கடலூரில் 45 இடங்கள்- கால்பதிக்கும் ஓ.என்.ஜி.சி

தமிழகத்தில் பெட்ரோலியம் மற்றும் ரசாயனம் எடுப்பதற்காக கடலூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் 45 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ONGC


தமிழகத்தில் ஏற்கெனவே ஹைட்ரோ கார்பன் திட்டம், கதிராமங்கலம் எண்ணெய் பிரச்னை எனத் தொடர்ந்து மக்கள் போராடி வரும்  நிலையில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகத்திலிருந்து வந்த அறிவிப்பில், தமிழகத்தில் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் எண்ணெய் மற்றும் ரசாயனம் எடுப்பதற்காக 45  இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 
இந்தத் திட்டத்துக்காக, இரு மாவாட்டத்தில் மட்டும் சுமார் 23,000  ஹெக்டர் பரப்பளவு கொண்ட இடம் கையகப்படுத்தபட உள்ளது. மேலும், இந்தத் திட்டத்துக்காக 1,146 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 


ஏற்கெனவே தமிழகத்தில் போராட்டங்கள் தொடந்துகொண்டிருக்கும் இந்த நிலையில், மேலும் புதிய எண்ணெய் மற்றும் ரசாயனம் எடுப்பதற்காக இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை ஆர்வலர்கள், 'இந்தத் திட்டத்தின் மூலமாகச் சுற்றுச்சூழல் பாதிக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட இரு மாவட்டங்களும் கடல் சார்ந்த மாவட்டங்கள் என்பதால் கடலின் தன்மையும் கடல் சார்ந்த உயிரினங்களும் கடுமையாகப் பாதிக்கும்' என்கிறார்கள். 


ஏற்கனவே  காவேரி படுக்கையில் 700  இடங்களில் எண்ணெய் கிணறுகள்  இருக்கிறது என ஓ.என்.ஜி.சி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.