ஜீவாசங்கர் இயக்கத்தில் ஜீவா - ஆர்யா நடிக்கும் திரைப்படம்

          

 இயக்குநர் ப்ளஸ் கேமராமேன் ஜீவாவிடம் உதவியாளராக இருந்தவர் சங்கர். அமரர்  ஜீவாமீது கொண்ட தொழில் பக்தி காரணமாக தன்பெயரை ஜீவா சங்கர் என்று மாற்றி வைத்துக்கொண்டார். சினிமாவில் ஆர்யாவை ஹீரோவாக அறிமுகம் செய்தவர் ஜீவா, அதுபோல ஜீவா சங்கருக்கும் ஒளிப்பதிவு, இயக்கம் என்று இரண்டு தொழில்களைக் கற்றுக்கொடுத்தவரும் ஜீவா. முதன்முதலில் ஒரு திரைப்படத்துக்கான கதையை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியிடம் சொன்னபோது அவருக்கு ரொம்பவும் பிடித்துப்போனது. 'நான்' என்று நாமகரணம் சூட்டப்பட்ட படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மட்டுமல்ல கேமராமேன்  என்று அனைத்து வேலைகளையும் ஜீவா சங்கரே பார்த்துக்கொண்டார். வெள்ளித்திரையில் ரிலீஸான 'நான்' திரைப்படம் தரம் ரீதியாகவும் வணிகரீதியாகவும் விஜய் ஆண்டனி, ஜிவா சங்கர் இருவரையுமே ஏமாற்றாமல் கைகொடுத்தது. அதன்பின் ஆர்யாவின் தம்பியைக் கதாநாயனாக்கி 'அமரகாவியம்' படத்தை இயக்கினார் ஜீவா சங்கர்.

ஆர்யா

சமீபகாலமாக ஜீவா கதாநாயகனாக நடித்து வெளியான படங்களும் ஆர்யா ஹீரோவாக நடித்து வெளியான படங்களும் பெரிதாகப் போகவில்லை. இந்தியில் உருவாகி வெளியாகும் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் சக்கைப்போடுபோட்டு வசூலில் சாதனை புரிந்து இருக்கிறது. அதுபோன்று வித்தியாசமான கதைக்கரு ஒன்றை உருவாக்கி இருக்கிறார் ஜீவாசங்கர். அந்தக் கதையின் ஒன்லைனை  ஜீவா -ஆர்யா இருவரிடமும் சொல்லி இருக்கிறார் ஜீவா சங்கர். இவர் சொன்ன கதை இரண்டு ஹீரோக்களுக்கும் பிடித்து போய்விட்டது. அப்புறம் என்ன?' நீங்க சொன்ன கதை நல்லா இருக்கு, படக்கதையை இன்னும் கொஞ்சம் டிஸ்கஷன் பண்ணி டெவலப் செய்யுங்க பாஸ்' என்று இருவரும் உற்சாகமாக ஊக்கப்படுத்த, ஜீவா சங்கர் இப்போது கதை விவாதத்தில் கடும்பிஸியாக இருக்கிறார். தமிழ்சினிமாவில் இருக்கின்ற  எல்லா ஹீரோக்களும் ஷோலோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் பார்த்திபனாக இருந்தாலும் சரி, மாதவனாக இருந்தாலும் சரி சேர்ந்து நடிப்பதில் தவறே இல்லை என்று விஜய் சேதுபதி முடிவெடுத்தது போல  எல்லா ஹீரோக்களும் ஈகோ பார்க்காமல் ஒருவரோடு ஒருவர்  இணைந்து நடித்தால் தமிழ்சினிமாவின் ஆரோக்கியம் நிச்சயம்  போஷாக்காக இருக்கும்.     

Do you like the story?

Please Appreciate the Author by clapping!