Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடவிநயினார் அணைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை! ஆட்சியருக்கு விவசாயிகள் பாராட்டு

நெல்லை மாவட்டம் அடவிநயினார் அணைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், அணைப் பகுதியைச் சீர்கேடு அடையச் செய்வதால் அங்கு செல்லத் தடை விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை மேற்கொண்ட நெல்லை மாவட்ட ஆட்சியரை விவசாயிகள் பாராட்டி மகிழ்கின்றனர்

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் மேக்கரை பகுதியில் அடவிநயினார் அணை அமைந்துள்ளது. மழைக் காலங்களில் இந்த அணையில் நீர் நிறைந்து காணப்படும். இதனால் அணைப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கம்.

அணைக்கு மேல் பகுதிக்குச் செல்லும் பயணிகள், அங்கேயே மது அருந்துவது, பாட்டில்களை உடைத்து வீசுவது, பிளாஸ்டிக் குப்பைகளாக அந்த இடத்தை ஆக்குவது என்பதுடன் சாமான்ய மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத வகையில் அந்த இடத்தை மாற்றிவிட்டனர்.

அணையில் குளிக்கும் பயணிகள் சோப்பு, எண்ணெய், ஷாம்பு போன்றவற்றைப் பயன்படுத்துவதால் அணையின் தண்ணீர் அசுத்தம் அடைகிறது. அத்துடன், அணையில் உள்ள உயிரணுக்கள் அழியும் சூழல் உருவானது. சுற்றுலாப் பயணிகளின் செயல்கள் விவசாயிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில், தாங்கள் சந்திக்கும் கஷ்டங்கள், வேதனைகளை விவசாயிகள் கொட்டித் தீர்த்தனர். இது தொடர்பாகப் புகார் மனுவையும் அளித்தனர். அவர்களின் கருத்தை கவனமுடன் கேட்ட மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, உடனடியாக அணையைப் பராமரிக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, உடனடியாக அணையின் மேல் பகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்குத் தடை விதித்து உத்தரவிட்டார். இது தொடர்பான அறிவிப்பை அந்த இடத்தில் வைக்கவும் உத்தரவிட்டார்.

இதனால், அடவிநயினார் அணைப் பகுதி சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேட்டில் இருந்து தப்பி உள்ளது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close