Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சாராயம் விற்பவர்களை விட்டுட்டு, எங்களைப் பிடிப்பீங்க..!'- மாட்டு வண்டிக்காரர்கள்

 

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குவாகம், மருதூர், வாரியங்காவல், இலையூர் போன்ற ஊர்களில் உள்ள மாட்டு வண்டிக்காரர்கள் வெள்ளாற்றில் மண் ஏற்றிவருவது வழக்கம். இந்நிலையில் இரண்டு நாள்களுக்கு முன்பு அதிகாலை ஆற்றில் மணல் ஏற்றிவந்த மாட்டுவண்டிகளை போலீஸார் மறித்து குவாகம் காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்று நிறுத்தி வைத்தனர். வெகு நேரமாகியும் வழக்கும் போடாமல் மாடு வண்டியில் பூட்டியபடியே மணல் லோடுடோடு நின்றுகொண்டிருந்தது. அப்போது, அன்பழகன் என்பவர், மாட்டுவண்டிக்காரர்களை வழக்குப்பதியுங்கள் இல்லையெனில் ஆர்.டி.ஓ-விடம்  புகார் தெரிவியுங்கள். நாங்கள் அங்கு சென்று அபராதத் தொகையைக் கட்டிவிடுகிறோம் என மாட்டுவண்டிகாரர் அன்பழகன் பேசியுள்ளார். போலீஸ்கிட்டயே எதிர்த்து பேசுறியானு சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, காவல்துறையினரைக் கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

 தகவலறிந்த அரியலூர் டி.எஸ்.பி மோகன்தாஸ் மற்றும் போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மாட்டுவண்டிகளும் விடுவிக்கப்பட்டன. 

 


இதுகுறித்து அன்பழகன் என்பவரிடம் பேசினோம். ``இரண்டு நாள்களுக்கு முன்பு வெள்ளாற்றில் மணல் அள்ளியதற்காக பத்து மாட்டு வண்டிகளைச் சிறைபிடித்தது காவல்துறை. ஆனால், எங்கள் மீது எந்த வழக்கும் போடாமல் மாடுகளோடு வண்டியைக் காவல்நிலையத்தில் வைத்திருந்தார்கள். மாடுகள் எதுவும் சாப்பிடாமல் நின்றதைப் பார்த்ததும் கடுப்பில் தமிழரசன், முருகன் என்ற காவலர்களிடம் எங்கள் மீது வழக்குப் போடுவதாகயிருந்தால் போடுங்க. இல்லைனா எங்களை விடுங்க என்று சொன்னதும் என்னடா போலீஸ்கிட்டயே குரலை உயர்த்திப் பேசுறியானு அடிக்க தொடங்கினார்கள்.நாங்கள் என்ன தவறு செய்தோம்.கேள்வி கேட்பது தவறா?
இரவு நேரத்தில் அ.தி.மு.க-வினர் வெள்ளாற்றில் திருட்டுத் தனமாக டன் கணக்கில் ஆற்றுமணல் அள்ளுகிறார்கள் என்று மக்களே பலமுறை புகார் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது கிடையாது. ஆனால், எங்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால் என்ன காரணம். எங்களைத் தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜெயங்கொண்டம் கொள்ளிடம் ஆற்றில் மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதி வாங்கிக் கொடுத்துள்ளார் எம்.எல்.ஏ அதுபோல இங்கும் அனுமதி தர வேண்டும் இல்லையேல் நாங்கள் போராட்டம் நடத்துவோம்’’ என்று முடித்தார்


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close