Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கதிராமங்கலத்தில் போராடி கைதான ஜெயராமன் தந்தை மரணம்... இறுதிச் சடங்கில் பங்கேற்க ஜாமீன் கிடைக்குமா? 

கதிராமங்கலம் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தந்தை இன்று அவரது சொந்த ஊரான மயிலாடுதுறை சேந்தங்குடியில் காலமானார். தந்தையின் இறுதிச் சடங்கிற்கு ஜெயராமன் கலந்துகொள்வாரா? அவருக்கு  நீதிமன்றம் ஜாமீன் வழங்குமா? என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் கதிராமங்கலம் மக்கள்.  

இதுகுறித்து, கதிராமங்கலம் போராட்டக்காரர்களிடம் பேசினோம். 'எங்களுடைய போராட்டத்திற்கு வடிவம் கொடுத்தவர் பேராசிரியர் ஜெயராமன் அவர்கள்தான். எந்த தவறும் செய்தாவரை காவல்துறையினர் பல்வேறு வழக்குகளின் கீழ் பதிவு செய்து கைது செய்திருக்கிறார்கள். எங்கள் மீது தடியடி நடத்தியதே காவல்துறையினர்தான். எங்கள் மீது வழக்குப்போட்டும் சிறையில் தள்ளியிருக்கிறார்கள். அவர் மீது கொலை முயற்சி, அரசு அதிகாரிகளை வேலை செய்யவிடாமல் தடுத்தல், பொதுச்சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 15 வழக்குகளுக்கு மேல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. குண்டர் சட்டம் போடவும் முயற்சி செய்தனர்.  
இதுவரை தஞ்சை குற்றவியில் நடுவர் நீதிமன்றத்தில் 3 முறை ஜெயராமன் விடுதலைக்காக ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தோம். ஆனால், மூன்று முறையும் நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இருபது நாள்களுக்கு மேல் சிறையில் இருந்தவரும் ஜெயராமன் அய்யா அவர்களை, தந்தையின் இறுதிச் சடங்கிற்காவது நீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்' என்று கூட்டாக கூறினார்.

ஜெயராமன், தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காவது ஜாமீன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் கதிராமங்கலம் கிராம மக்கள்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close