Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஃபேஸ்புக் மூலம் அழைப்பு விடுத்த மாணவர் கைது!

தனது பேஸ்புக் மூலம் கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த பல்கலைக்கழக மாணவர் கைது செய்யப்பட்டதால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர் குபேரன். இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பி.எச்.டி படித்து வருகிறார். குபேரன், கடந்த 20-ம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "மாணவ சமுதாயமே... கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் போராட்டத்திற்க்காக சிதம்பரம் பூமா கோயிலில் ஒன்று திரளுங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

இதையறிந்த சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸார் பூமாகோவிலுக்கு சென்றனர். அங்கு மாணவர்கள் ஒன்று கூடி போராட்டத்திற்கு தயாரானார்கள். இதை கண்ட போலிஸார், இது சட்டத்துக்கு புறம்பானது எனவே போராட்டம் நடத்தக் கூடாது. மீறி போராட்டம் நடத்த முயன்றால் எல்லோரும் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்துள்ளனர். 

அதன் பிறகு, "உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். உடனடியாக காவல் நிலையத்திற்கு வந்துவிட்டு போங்கள்" என்று நள்ளிரவில் குபேரனுக்கு போன் செய்தார்கள் போலீஸார். அதற்கு குபேரன், "நான் காலையில் வருகிறேன். எதுவாக இருந்தாலும் அப்போது பேசிக் கொள்ளலாம்" என்றிருக்கிறார். அதனை ஏற்காத போலீஸார், குபேரனை மிரட்டி நள்ளிரவில் காவல் நிலையம் வரவழைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close