பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை: இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - இந்தியா இன்று மோதல்! | India take on England in Women's cricket World cup final

வெளியிடப்பட்ட நேரம்: 03:28 (23/07/2017)

கடைசி தொடர்பு:03:28 (23/07/2017)

பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை: இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - இந்தியா இன்று மோதல்!

11-வது பெண்கள் உலகக் கோப்கை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. கடந்த 15-ம் தேதியுடன் லீக் போட்டிகள் முடிந்தது.  நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. முதல் அரையிறுதியில் இங்கிலாந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 2-வது அரை இறுதியில் இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. கோப்பைக்கான இறுதிப் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்தியதால் கோப்பையை வெல்லும் உற்சாகத்தில் இந்திய அணி உள்ளது. இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்றது. லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி உள்ளதால் இந்தியா மிகுந்த நம்பிக்கையுடன் ஃபைனலில் களம் இறங்கும். ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து, லீக் ஆட்டத்தில் ஒரு தோல்வியை  மட்டுமே சந்தித்தது. சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். 3 முறை சாம்பியனான இங்கிலாந்து 4-வது தடவையாக கோப்பையை வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறது. இறுதிப் போட்டி குறித்து இந்திய கேப்டன் மிதாலி ராஜ் கூறுகையில், ''இந்திய அணி வீராங்கனைகள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது எங்களுக்கு உற்சாகம் கொடுத்துள்ளது. வெற்றிதான் எங்கள் இலக்கு'' என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close