மாஞ்சோலைத் தொழிலாளர் நினைவு தினம் இன்று!

நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் பாம்பே-பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் எஸ்டேட் உள்ளது. நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் தேயிலை, மிளகு உள்ளிட்டவற்றை பயிரிட்டு வரக்கூடிய அந்த நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

manjaloi

தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாகவே உள்ளது. இதையடுத்து, 1999 ஜூலை 23- ம் தேதி நெல்லை ஆட்சியர் அலுவலகத்துக்கு உர்வலமாகச் சென்று மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது. 

மார்க்சிஸ்ட், புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தோட்டத் தொழிலாளர்களும் பங்கேற்றனர். நெல்லையில் புறப்பட்ட ஊர்வலம் கொக்கிரகுளம் ஆற்றுப்பாலத்தின் அருகே வந்து அருகில் இருந்த கலெக்டர் அலுவலகம் நோக்கித் திரும்பியபோது, போலீஸார் தடியடி நடத்தினர். தலைதெறிக்க ஓடிய கூட்டத்தினர் தாமிரபரணி ஆற்றில் விழுந்து உயிரிழந்தனர்.

இதில், ஒரு சிறுவன், பெண் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர். அவர்களது நினைவாக ஆண்டுதோறும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்துகின்றனர். 

இன்று தாமிரபரணி நினைவு தினம் என்பதால் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அத்துடன், ஒவ்வொரு அரசியல் கட்சிகள், அமைப்பினருக்கென காவல்துறையினர் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொடுத்து உள்ளனர். அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினர் என மொத்தம் 25 முறை நேரம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!