வெளியிடப்பட்ட நேரம்: 11:26 (24/07/2017)

கடைசி தொடர்பு:11:57 (24/07/2017)

காயிதே மில்லத் கல்லூரி மாணவிகள் 105 பேர் மருத்துவமனையில் திடீர் அனுமதி!

சென்னை அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி விடுதியில், நேற்று இரவு உணவு சாப்பிட்ட 105 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்கள், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி


சென்னை அண்ணாசாலை அருகே உள்ளது காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி. இந்தக் கல்லூரி விடுதியில் நேற்று இரவு உணவு பரிமாறப்பட்டது. அந்த உணவைச் சாப்பிட்ட 105 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள், இன்று காலை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


57 பேர் ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும், 48 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். அதில் பெரும்பாலானோர்க்கு புற நோயாளிகள் பிரிவிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு, விடுதிக்கு திரும்பினர். தற்போது வரை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 17 பேரும், ராயப்பேட்டை மருத்துவமனையில் 4 பேரும் தொடர்ந்து சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

மாணவிகள் சாப்பிட்ட உணவில் பல்லி விழுந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, காயிதே மில்லத் கல்லூரியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுசெய்துவருகின்றனர். இதனிடையே, கல்லூரியின் விடுதி மாணவிகளுக்கு மட்டும் ஒரு வார காலம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.