Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தலையில் மரக்கன்று... முதுகில் கலாம்... இயற்கையைக் காக்க ஒரு சாமானியனின் முயற்சி!

அய்யப்பன் மரம் கலாம்

தலையில் மரக்கன்றையும், முதுகில் அப்துல் கலாம் படத்தையும்  சுமந்துகொண்டு திருப்பூரிலிருந்து மழை வெய்யில் பாராமல் ராமேசுவரத்தை நோக்கி நடைபயணமாகச் சென்று கொண்டிருக்கிறார் ஐயப்பன். இவரை 'மரம் ஐயப்பன்' என்றால்தான் திருப்பூர்வாசிகளுக்கு தெரியுமாம். 

திருப்பூரிலிருந்து 380 கி.மீ. தூரம் நகரங்கள், கிராமங்கள் என பல்வேறு இடங்களைக் கடந்து காலில் ஏற்பட்டுள்ள கொப்புளங்களை மறந்து, 27-ம் தேதி வருகிற அப்துல்கலாம் நினைவுநாளை முன்னிட்டு, அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமேஸ்வரத்தில் தனது நடைபயணத்தை நிறைவு செய்கிறார். அன்றுதான் அவருடைய கலாமின் அழகிய மணிமண்டபத்தை பிரதமர் திறந்து வைக்கிற பிரமாண்ட நிகழ்ச்சியும் ராமேசுவரத்தில் நடைபெறுகிறது.

மதுரைக்கு வந்த 'மரம் ஐயப்பனை' வியப்பாக பார்த்த மக்களிடம் சென்று,  மரம் நடுவதன் அவசியத்தையும், அதன் பலன்களையும் எடுத்து சொல்கிறார். பிள்ளைகளுக்கு மரம் நட கற்றுக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இயற்கையை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்கிறார்.  இவரிடம் பேசிய மக்கள் செல்ஃபீ எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர்கள். அவர்களிடம் பேசும்போது, ''வாழ்க்கையில நல்லது செய்யணும்னு ஆசைப்பட்டீங்கன்னா,  கலாம் அய்யாவோட பத்துக்கட்டளைகளில் ஒன்றான  மரம் நட்டு அத வளக்குற பணிகளைச் செய்யுங்க,  நான் கடந்த பதினாலு வருசமா செஞ்சிட்டு வர்றேன், அதனால குடும்பத்தினரோடு மகிழ்ச்சியா இருக்கிறேன்' 'என்றார்.

அவரிடம் பேசினோம், ''தேனி மாவட்டம் தேவாரம்தான் என்னுடைய சொந்த ஊர். பிழைப்புக்காக திருப்பூரில் வசிக்கிறேன். சிறுவயதிலிருந்தே செடிகள், மரங்கள் மீது பற்றுதல் ஏற்பட்டது. திருப்பூரில் பலகார வியாபாரம் செய்து வரும் நான் அதில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை மரம் நடுவதற்காகவும், அதை வளர்ப்பதற்காகவும் செலவு செய்கிறேன். என் பிள்ளைகளுக்கும் இந்தப் பழக்கத்தை கற்றுக்கொடுத்து, மற்ற பிள்ளைகளுக்கும் மரம் வளர்ப்பது பற்றியும் அதைப் பாதுகாப்பது பற்றியும் எடுத்துச் சொல்கிறேன். பிழைக்கிற ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் திருப்பூர் மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள முன்னூறுக்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள் உட்பட பல பள்ளி வளாகங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளேன். அவற்றை கவனமாக வளர்த்திட மாணவ, மாணவியருக்கு கற்றுக்கொடுத்துள்ளேன். 'மரம் நடுவீர், நட்ட மரத்தைப் பாதுகாப்பீர்' இதைத்தான்  போகிற இடமெல்லாம் சொல்லிட்டு போகிறேன்.. சுற்றுச்சூழலுக்கு அடிப்படையா இருக்கறது மரங்கள்தான். சுயநலத்துக்காக அதை அழிச்சிட்டு வராங்க. அதனாலதான் அப்துல்கலாம் அய்யா, தன்னோட பத்துக்கட்டளைகளில் மரங்கள் நடுறதயும் முக்கியமான கட்டளையா சொல்லியிருந்தாரு. அவருடைய லட்சியக் கனவை மக்கள்கிட்ட கொண்டு போறதுக்காக இந்த  விழிப்புஉணர்வு நடைபயணத்தை  ஆரம்பிச்சேன்'' என்றார் 'மரம்' ஐயப்பன்.

ayyappan அய்யப்பன்

திருப்பூரில் தெருக்களில் பலகாரம் விற்பனை செய்து குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்துகிற ஐயப்பன், அதை பொருட்படுத்தாமல்  மரம் நடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக யாரிடமும் உதவி கேட்பதில்லை என்பதைக் கொள்கையாக வைத்திருக்கிறார். உதவ வந்த நபர்களிடம் வேண்டாமென்று சொல்லி விடுவாராம். அப்துல்கலாம் மீது பேரன்பும் பெரும் மதிப்பும் கொண்டதால்தான் யாரிடமும் உதவி வாங்குவதில்லை என்கிறார். 

வருகிற 27-ம் தேதி அப்துல்கலாம் நினைவு நாளில் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ள  மணிமண்டபத்தின் முன், தான் தலையில் சுமந்து செல்லும் மரக்கன்றை அங்கே நட வேண்டுமென்பதே அவருடைய ஆசை. இதன் மூலம் மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புஉணர்வு மக்களிடம் விரைவாக சென்று சேரும் என்கிறார். ஆனால், அதற்கு அதிகாரிகள் அனுமதி கொடுப்பார்களா என்று தெரியவில்லை. நம்பிக்கையோடு செல்கிறார். இதுபோன்ற நம்பிக்கை மனிதர்களை போற்றுவோம்....!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close