'ஜெயலலிதா மணிமண்டபம்' விவகாரம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டத் தடைக் கோரிய வழக்கில், தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்


தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்தவரும் வழக்கறிஞருமான துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், சட்டவிரோதமாக மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அவர் உடலை வேறு இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும். அதேபோல, மெரினாவில் புதிய கட்டமைப்புகள் எழுப்பத் தடை உள்ள நிலையில், ஜெயலலிதாவின் மணி மண்டபம் கட்ட அனுமதிக்கக் கூடாது" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடற்கரை ஒழுங்கு மண்டலம் விதிகள் 2005-ன் படி, சென்னை மெரினாவில் புதிய கட்டமைப்புகள் எழுப்பத் தடை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!